திருநெல்வேலி
குவைத்தில் தமுமுக தலைவர் பங்கெடுத்த எழுச்சிமிகு நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமது வளைகுடா பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 3ம் தேதி குவைத்திற்கு வருகை புரிந்தார். குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமுமுக குவைத் மண்டலத் தலைவர் அமானுல்லாஹ், செயலாளர் பொறியாளர் ஷாநவாஸ் உள்ளிட்ட தமுமுக நிர்வாகிகள், மவ்லவி எஸ்.கே. சம்சுத்தீன் ஆலிம் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு அவரை வரவேற்க வந்திருந்தனர்.
ஆர்வத்தைத் தூண்டிய கேள்வி பதில் அரங்கம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்குகொண்ட சிறப்பு கேள்வி பதில் அரங்க நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 5ம் தேதி இரவு குவைத் ரவ்தா ஜம்யிய்யத்துல் இஸ்லாஹியா அரங்கத்தில் நடைபெற்றது. சவூதி கிழக்கு மண்டல தமுமுக தலைவர் பொறியாளர் சபியுல்லாஹ் கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மற்றும் இந்திய முஸ்லிம் சமூக நிலை குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமுமுக தலைவர் சளைக்காமல் சுமார் இரண்டரை மணி நேரம் பதில் அளித்தார். தமுமுகவின் செயற்பாடுகள் குறித்து வந்திருந்த மக்கள் முழுமையாக திருப்தி பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை அளித்த இஃப்தார் விருந்து
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை தமுமுக தலைவர் வருகையையொட்டி ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சியில் தமுமுக தலைவருக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். டி.எம்.சி.ஏ. நிர்வாகிகள்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் குவைத்தில் பங்குகொண்ட முதல் நிகழ்ச்சி, தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (டி,எம்.சி.ஏ.) நடத்திய இஃப்தார் (நோன்பு துறக்கும்) நிகழ்ச்சியாகும்.
குவைத் தாஸ்மாவில் உள்ள குவைத் ஆசிரியர் சங்கத்தின் அரங்கில் செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு டி.எம்.சி.ஏ. அமைப்பின் தலைவர் அல்மாஸ் முஸ்தபா தலைமை தாங்கினார். மவ்லவி கபீர் அலி அவர்களின் திருக்குர்ஆன் முழக்கத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை டி.எம்.சி.ஏ. அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் எம். முனிர் அஹ்மது தொகுத்து வழங்கினார். டி.எம்.சி.ஏ. அமைப்பின் பொதுச் செயலாளர் என்.எ.எம். அப்துல் அலீம் வரவேற்புரை ஆற்றினார். சகோதரர் அப்துல் அலீம் தனது வரவேற்புரையில் டி.எம்.சி.ஏ. குவைத்தில் வாழும் தமிழக முஸ்லிம்களின் நலனுக்காக ஆற்றிவரும் பணிகளை எடுத்துரைத்தார். தமிழகத்தில் சமுதாய நலனுக்காக சிறப்பு மிகுந்த பணிகளை ஆற்றிவரும் தமுமுகவின் தலைவரை வரவேற்பதில் டி.எம்.சி.ஏ. மகிழ்ச்சி அடைவதாக தனது உரையில் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சமுதாயத்தின் ஒற்றுமைக்காக, உரிமைகளைக் காப்பதற்காக தமுமுக ஆற்றிவரும் சேவைகளை எடுத்துரைத்தார். டி.எம்.சி.ஏ.யின் துணைத் தலைவர் எம்.ஐ. சவ்கத் அலியின் நன்றி யுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. குவைத்தில் வாழும் தமிழக முஸ்லிம் சமுதாயத்தினர் பெருமளவில் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டனர்.
தமுமுக குவைத் மண்டலம் நடத்திய எழுச்சி மிகுந்த கருத்தரங்கம்.
வட்டியில்லா வங்கியும் முஸ்லிம்களின் நிலையும்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குவைத் மண்டலத்தின் சார்பாக வட்டியில்லா வங்கியும் முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங் கம் கடந்த வியாழன் (செப்டம்பர் 5) இரவு குவைத் ரஸ்தாவில் உள்ள ஜம்யிய்யத்துல் இஸ்லாஹ் உள்ளரங்கத்தில் நடைபெற்றது. குவைத் மண்டல தமுமுக தலைவர் அமானுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கம் மவ்லவி முஹம்மத் மஹ்லரியின் திருக்குர்ஆன் விளக்கவுரையுடன் தொடங்கியது. குவைத் மண்டல தமுமுகவின் செயலாளர் பொறியாளர் ஷாநவாஸ் வரவேற்புரை ஆற்றினார். துணைச் செயலாளர் முஹம்மது இக்பால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சவூதி தமுமுக கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் சபியுல்லாஹ் கான், சவூதி ஜுபைல் கிளை தமுமுக தலைவர் சர்புத்தீன், பேராசிரியர் தாஜுத்தீன் மற்றும் மவ்லவி எஸ்.கே. சம்சுத்தீன் ஆலிம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கிய பிறகு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்றும், வாழ்க்கையின் ஒவ்வொரு துறைக்கும் அது வழிகாட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். இஸ்லாம் காட்டும் பாதையில் வாழ்வின் ஒவ்வொரு துறையையும் அமைக்க வேண்டும். இதுபோல் பொருளாதாரத் துறைக்கும் இஸ்லாம் வழிகாட்டு கின்றது. இன்றைய உலகம் வட்டியின் அடிப்படையில் இயங்குகின்றது, முஸ்லிம்களும் இந்த நடப்பு பொருளாதார முறையில் மூழ்கக்கூடிய நிலை உள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக வட்டியில்லாமல் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க இயலும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது வட்டி யில்லா வங்கிகளாகும். முதன்முதலில் காசோலையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்களே முஸ்லிம்களாகும் என்பதை தமுமுக தலைவர் ஆதாரப்பூர்வமாக விளக்கினார். இந்தியாவில் வட்டியில்லா வங்கிகள் தொடங்க எடுக்கப்பட்ட முயற்சிகளை தமுமுக தலைவர் எடுத்துரைத்தார். வட்டியில்லாமல் வாழ்வை அமைப்பதுதான் இம்மை மறுமை நல்வாழ்வை மகிழ்ச்சியாக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் தமுமுக தலைவர் விவரித்தார். இன்று இந்தியாவில் ஹலால் பங்குகள் மியூச்சுவல் பங்குகள் வந்துள்ளது குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இன்றைய தமிழக மற்றும் இந்திய முஸ்லிம்களின் நிலையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். முஸ்லிம்களின் உரிமைகளைக் காக்க தமுமுக எடுத்துவரும் நடவடிக்கைகளை அவர் விவரித்தார். நள்ளிரவைத் தாண்டி நடைபெற்ற இந்தக் கருத்தரங் கில் திரண்டிருந்த மக்கள், தமுமுக தலைவரின் உரையை முழு கவனத்துடன் செவிமடுத்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் வரவேற்புரை ஆற்றுகிறார் தமுமுக குவைத் மண்டல செயலாளர் ஷாநவாஸ். மேடையில் (இடமிருந்து) குவைத் மண்டலத் தலைவர் அமானுல்லாஹ், துணைச் செயலாளர் இக்பால், தமுமுக தலைவர், சவூதி கிழக்கு மண்டல தமுமுக தலைவர் ஷபியுல்லாஹ் கான்
இணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மானின் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக