செவ்வாய், 21 ஏப்ரல், 2009

குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது:-

17.04.2009 வெள்ளி:-
குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணிக்கு ஏன்? வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் குவைத் ஃபாஹஹீல் துனை மண்டல பகுதியான ரிக்கா பகுதியில் தமுமுக மற்றும் பிற சமுதாய சகோதர சொந்தங்களை வர வழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாயவரம் ஆடிட்டர் சாஹுல் ஹமீது தலைமை தாங்கினார்.மண்டல தமுமுக செயலாள‌ர் ஷாநவாஸ் திருக்குர் ஆன் வசனம் ஓதி தொடங்கி வைத்தார்.அய்யம் பேட்டை ஜெ.ஜாபர் அலி முன்னிலை வகித்தார்.ரிக்கா தமுமுக தலைவர் ஏ.சாதிக் வரவேற்று பேசினார்.
குவைத்தில் முதன் முறையாக:-
குவைத் தமுமுக வின் நான்கு வருட செயல்பாடுகளில் முதன் முறையாக‌ தமிழகத்திலிருந்து தமுமுக மாநில பேச்சாளர் சகோ:கோவை செய்யது அவர்கள் அலைபேசி மூலம் சிறப்புரையாற்றினார்.
குவைத் இஸ்லாமிய அழைப்பாளர்:-
புலவர்,டாக்டர் சாகுல் ஹமீது ஆலிம் அவர்களும் பேசினார்கள்.கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜமாத்தார்களையும் கூட்டனி தோழமை கட்சியினரை வைத்தும் சமூக நல ஆர்வலர்களையும் அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்க்கு மக்கள் தொடர்பாளர் தஞ்சை அக்பர் பாட்ஷா, ஃபாஹஹீல் மண்டல தமுமுக செயலாளர் அ.அப்துல் வாஹித் மேலப்பாளையம், அற‌ந்தாங்கி அப்துல் அஜீஸ், சாதிக், புதுக்கோட்டை முஜிப்பூர் ரஹ்மான், குவைத் சிட்டி மண்டல தலைவர் நா.பீர்மரைக்காயர், சத்ருத்தீன், மற்றும் பெரும்பாலன மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் கிளை பொருளாளர் வி.சாதிக் திருவாரூர் நன்றி உறையாற்றினார். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
செய்திக‌ள்:நா.பீர்மரைக்காயர். துனை ம‌ண்ட‌ல த‌லைவ‌ர்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளது முழு விவரம்:-

மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளது முழு விவரம்:-
மயிலாடுதுறை
சீர்காழி (தனி) மயிலாடுதுறை, பூம்புகார், திருவிடை மருதூர் (தனி) கும்பகோணம், பாபநாசம்
சீர்காழி (தனி)
சீர்காழி தாலுகா (பகுதி) கீழையூர், மேலையூர், மற்றும் வாணகிரி கிராமங்கள்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தாலுகா (பகுதி) சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்ட நல்லூர், திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2 பிட், சேத்தூர், பொன்மாநல்லூர், மேலாநல்லூர், வில்லிய நல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி, காளி 2 பிட், ஐவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்த நல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டவபுரம், நீடுர், கங்கணாம்புத்தூர், அருள் மொழி தேவன், பாண்டூர், திருமங்கலம், முருக மங்கலம், ஆலுங்குடி, திருமணங்சேரி. பொன்னூர், மகராஜபுரம். திருஇந்தளூர், உளந்தக் குப்பை, மணக்குடி, வெள்ளாலகரம், பண்டாரவடை, மாப்படுகை, சோழம்பேட்டை, வாணாதிராஜபுரம், கடலங்குடி, வில்லியநல்லூர், சேத்திர்பாலபுரம், ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்ட மங்கலம், மயிராடுதுறை, நல்லத்துக்குடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள், மணல்மேடு (பேரூராட்சி) மயிலாடுதுறை (நகராட்சி') மற்றும் குத்தலாம் (பேரூராட்சி)
பூம்புகார்
தரகம்பாடி தாலுக்கா, சீர்காழி தாலுகா (பகுதி) கீழையூர், மேலையூர் மற்றும் வாணகிரி கிராமங்கள்.
மயிலாடுதுறை தாலுகா (பகுதி) அசிக்காடு, தொழுதலங்குடி, துளசேந்திபுரம், மேலையூர், சென்னிய நல்லூர், இளனாம் சென்னிய நல்லூர், மேக்கிரி மங்கலம், மாதிரி மங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கூடலூர், கொக்கூர், மருதூர், பெருமாள் கோயில், கீழையூர், செங்குடி, வழுவூர், திருநள் கொண்ட சேரி, அரிவளூர், பெருஞ்சேரி, கழினிவாசல், தத்தங்குடி, பண்டாரவரை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், அனந்த நல்லூர், கோமல் கிழக்கு, கோமல் மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதபுரம், பொரும்பூர், எழுமகளூர், நக்காம்பாடி, மாந்தை, கீழ பருத்தி குடி, மேல பருத்தி குடி, நல்லாவூர், கோடி மங்கலம், மேல் அகலங்கன், கோனேரி ராஜபுரம், கோனேரி ராஜபுரம் 2 பிட் கிராமங்கள். சிவனாரகரம்.
திருவிடைமருதூர் (தனி)
திருவிடை மருதூர் தாலுகா, கும்பகோணம் தாலுக்கா (பகுதி) பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துரை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்கடி, புத்தகரம், இராண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பிய வரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார் கோவில், திருநாரையூர், ஏன நல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகர்) பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நகாரம்பேட்டை, விசலூர், திருச்சேறை, இஞ்சிக் கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.
கும்பகோணம்
கும்பகோணம் தாலுகா (பகுதி), அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்த நல்லூர், கொத்தங்குடி, கொத்தங்கடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப் புலியூர், கொரநாட்டு கரப்பூர் 1 மற்றும் கொரநாட்டு கரப்புர் 2, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், அம்மா சத்திரம், மூப்பக்கோவில், மேலக்காவேரி, பாபுராசபுரம், பழவதான் கட்டளை, மிருத்தியஞ்சப், படை வீடு, அம்மாத் தோட்டம், சீனி வாச நல்லூர், மலையப்ப நல்லூர், மாத்தி, சிதம்பரநாத முதலி தோட்டம், திருமெய்ஞானம், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரிய படைவீடு, மேல கொள்கை, கீழ கொற்கை, பாளைய நல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதா நல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையலூர், தில்லையம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டிமால், சாரங்கபாணி பேட்டை, உள்ளூர் (சென்சஸ் டவுன்) பெருமாண்டி( சென்சஸ் டவுண்) கும்பகோணம் (நகராட்சி), தாராசுரம் (பேரூராட்சி) மற்றும் திருநாகேஸ்வரம் (பேரூராட்சி)
பாபநாசம்
பாபநாசம் தாலுகா, கும்பகோணம் தாலுகா (பகுதி) நாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள் கோயில் தென்பாதி, வெள்ளாள பிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி, தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள், சுவாமி மலை (பேரூராட்சி)

மத்திய சென்னை
வில்லிவாக்கம், எழும்பூர் (தனி) துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர்.
வில்லிவாக்கம்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 55 முதல் 54 வரை மற்றும் 62
எழும்பூர் (தனி)
சென்னை மாநகராட்சி வார்டு எண் 42, 45 முதல் 47 வரை, 61, 71, 72 மற்றும் 100 முதல் 106 வரை
துறை முகம்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43,44,48,49 மற்றும் 80
சேப்பாக்கம் (திருவல்லிக்கேணி)
சென்னை மாநகராட்சி வார்டு எண் 79, 81 முதல் 93 வரை மற்றும் 111.ஆயிரம் விளக்கு, சென்னை மாநகராட்சி வார்டு எண் 76 முதல் 78 வரை, 107 முதல் 110 வரை, 112 முதல் 114 வரை 118 மற்றும் 119.
அண்ணா நகர்சென்னை மாநகராட்சி வார்டு எண் 65 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை

இராமநாதபுரம்
அறந்தாங்கி, திருச்சூழி, பரமக்குடி (தனி) திருவாடானை, இராமநாதபுரம், முதுகுளத்தூர்
பரமக்குடி (தனி)
பரமக்குடி தாலுகா, கமுதி தாலுகா (பகுதி,) த. புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ, தரைக்குடி, வல்லந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார் குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம், மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள், அபிராமம் (பேரூராட்சி)
திருவாடானை
திருவாடானை தாலுகா, இராமநாதபுரம் தாலுகா (பகுதி) பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவி பட்டிணம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார் கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவாரூர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம் காத்தான், திருவொத்திய கழுகூரணி, தேர்போகி, அழகன் குளம், சக்கரக் கோட்டை, கூரியூர், அச்சுந்தன் வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள்.
இராமநாதபுரம்
இராமேஸ்வரம் தாலுகா, இராமநாதபுரம் தாலுகா (பகுதி) ஆட்டங்கரை, பெருங்குளம், வாலாந்தரவை, குயவன் குடி, இராஜசூரிமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம் கொண்டான், பிரப்பன் வலசை, சாத்தான் குலம், மண்டபம், நொச்சியூரணி, புது மடம், காரான், பெரிய பட்டிணம், களிமண் குண்டு, திருப்புல்லாணி, களரி, உத்திரகோச மங்கை, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கனேரி, புல்லாந்தை மற்றும் மாயான் குளம் கிராமங்கள், இராமநாதபுரம் நகராட்சி, கீழக்கரை பேரூராட்சி, மற்றும் மண்டபம் பேரூராட்சி.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகா (பகுதி) முடிமன்னார் கோட்டை, நீராவி, நீ, கரிசல் குளம், மேலராமநதி, கீழராமநதி, க, நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல் நாடு, முஷ்டக் குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல் குளம், க, வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரிய மங்கலம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு. புதுக்குளம், இடி விலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து, வாலசுப்ரமணிய புரம், பா. முத்துராமலிங்கபுரம், பெரு நாழி, காட மங்கலம், சடையேனந்தல், சம்பங்குளம், கமுதி மற்றும் தவசிக் குறிச்சி கிராமங்கள். கமுதி பேரூராட்சி
அறந்தாங்கி
மணமேல்குடி தாலுகா, ஆவுடையார் கோயில் தாலுகா, அறந்தாங்கி தாலுகா (பகுதி), ஆளப்பிறந்தான், மூக்குடி, ரெத்தினக் கோட்டை, மேமங்கலம், கோவில் வயல், மேலப்பட்டு, பள்ளத்திவயல், ஊர்வணி, ஆலங்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன் வயல், கம்மங்காடு, உலகளந்தான் வயல், வீர மங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேல வயல், குண்டக வயல், கீழச்சேரி, சிவந்தான் காடு, வேங்கூர், சீன மங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன் வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியா மறைக்காடு, களக்குடி, கீழ்குடி, ஏகணி வயல், ஏகப் பொருமாளூர், ஆடலைக் காலவைரவ புரம், ஓமக்கன் வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான் வயல், பங்கயத்தான் குடி, வெள்ளாட்டு மங்கலம், கண்டிச்சாங்காடு, பிராமண வயல், அம்மன் சாக்கி, மாணவ நல்லூர், மெய் வயல், வேட்டனூர், கோங்குடி, சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள், அறந்தாங்கி (நகராட்சி)

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு:-

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி,
மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.
சலிமுல்லாஹ் கான்
http://www.tmmk.info/news/999368.htm

வியாழன், 2 ஏப்ரல், 2009

தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-

மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:
தென்காசி, ஏப். 1:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஒற்றைக் காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டு பகுதியில் மவுண்ட்ரோடு சாலையை புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரியும், இப் பகுதியில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியாததைக் கண்டித்தும், புதுப்பிக்கப்பட்ட, சுகாதார வளாகத்தைத் திறக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினரும் கட்சியின் ஒன்றியச் செயலருமான முகம்மது மைதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பா, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சலீம், நகரச் செயலர் சலீம், பொருளாளர் சுலைமான் சேட், துணைச் செயலர்கள் சாகுல், திவான்ஒலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முடிவில் நகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
செய்திகள் : நெல்லை உஸ்மான்

செவ்வாய், 31 மார்ச், 2009

ரிக்கா கிளையில் மார்க்க சொற்பொழிவு:-

ரிக்கா தமுமுக கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி:
27.03.2009 .வெள்ளி
குவைத் ரிக்கா பகுதியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை மௌலவி அப்துல் ரஹ்மான் நிஸாமி கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.மண்டலச் செயலாளர் ஷாநவாஸ் தொகுத்து வழங்கினார்.கிளை செயலாளர் ஜெ.ஜாபர் அலி வரவேற்புரை ஆற்றினார்.மார்க்க ஒழுக்கங்களை பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி அன்சர் ஹுசைன் ஃபிர்தௌசி[இஸ்லாமிய அழைப்பாளர்] உரையாற்றினார். மார்க்க கடைமைகளை அன்றாட வாழ்வில் பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி ஜமாலுத்தின் ஃபாஷி[இஸ்லாமிய அழைப்பாளர்] உரையாற்றினார்.நிகழ்ச்சியில்
அப்துல் அஜீஸ்,நா.பீர்மரைக்காயர்,அ.அப்துல் வாஹித்,குவைத் மீடியா செயலாளர் எஃப்.என்.முஜிபுர் ரஹ்மான்.மற்றும் ஏறாளமானோர் கலந்து பயனடைந்தனர்.
இரவு உணவுடன் கிளைத் தலைவர் எ.சாதிக் பாட்ஷா,கிளை பொருளாள‌ர் வி.சாதிக்.ஆகியோரின் ஒருங்கினைப்பில் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.நிக‌ழ்ச்சி ஏற்பாடு ஃபாஹ‌ஹில் துனை ம‌ண்ட‌ல‌ம்.

வெள்ளி, 27 மார்ச், 2009

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...

தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்..
இணையத்திலேயே http://www.elections.tn..nic.in/forms.htm படிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்றுதேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம். குறிப்பாக: முஸ்லிம் வாக்காளர்கள் சமுதாய நலன்கருதி பெயர் சரிபாக்கும் விசயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அக்கரையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வியாழன், 26 மார்ச், 2009

நெல்லை மாநகராட்சி முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நெல்லை மாநகராட்சி முற்றுகைதிருநெல்வேலி மாநகராட்சி 29வது வார்டு மேலப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 1 முதல் 12 தெருக்களுக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் குடிநீருக்காக சிரமப்பட்டனர். இந்நிலையை போக்கக் கோரி நெல்லை மாநகராட்சியை 21.03.2009 அன்று காலை தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாருக் தலைமையில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இப்பகுதியில் இரண்டு தினங்களில் குடிநீர் பைப்புகள் சரி செய்யப்படும் என்றும் அதுவரை இப்பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் கமிஷனர் உறுதியளித்தார்.அப்போது மாவட்ட துனை தலைவர் கே.ஸ்.ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் உஸ்மான் கான், மேலப்பாளையம் நகர தலைவர் மைதீன் பாதுஷா, செயலாளர் காசீம் பிர்தௌசி,பொருளாள‌ர் காஜா, 29வது வார்டு, செயலாளர் பி.செய்யது அப்துல் காதர், தலைவர் கபூர், பொருளாளர் ஞானியார், துனை செயலாளர் சுல்தான், துனை தலைவர் அஜீஸ், மருத்துவ அணி செயலாளர் எ.கே.அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.