செவ்வாய், 6 ஜனவரி, 2009

சமூக நீதிக்கு ஒரு புத்துணர்ச்சி:- igc kuwait

ஜனவரி 1, 2009
குவைத்தில் சமூக நீதி கருத்தரங்கம் :- குவைத்தில் வாழும் தமிழர் சமூகத்தில் 2009 புதிய வருடம் மாபெரும் சமூக நீதி எழுச்சியுடன் பிறந்தது. இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின்(IGC) சார்பாக ஏற்பாடு செய்யப் பட்ட இந்த நிகழ்ச்சிக்கு லக்கி பிரின்டர்ஸ் நிறுவன உரிமையாளர் ஜனாப்.ஏ.சுலைமான் பாட்சா அவர்கள் தலைமை தாங்கினார். IGC மெளலவி.நசீர் அஹமது ஜமாலி அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.ஜி.சி மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப், “சமூகப் பணியும் இஸ்லாத்தின் ஒரு முக்கிய கடமை” என்ற அர்த்தம் தரக் கூடிய வசனங்களை ஓதி, நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. சகோ.நாகூர் சுல்தான் வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர்.சுப வீரபாண்டியன் அவர்களும், ( செயலாளர் -திராவிட இயக்க தமிழர் பேரவை) சகோ.தமீமுன் அன்ஸாரி, (தமுமுக மாநிலச் செயலாளர்) அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். சுபவீ அவர்கள் தமிழ் நாட்டில் ஃபாஸிஸ பிரிவினை வாத சக்திகளுக்கு எதிராக ஒடுக்கப் பட்ட சமூகங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்று கூறினார். சகோ.தமீமுன் அன்ஸாரி பேசுகையில் தமிழ் நாட்டில் இன்று ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அத்தகைய எழுச்சியில் குவைத் தமிழ் சமூகமும் பங்கு கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த எழுச்சி 1995 ஆம் ஆண்டு தொடங்கி 2009 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில் ஒரு அரசியல் இயக்கமாக மாற இருப்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பேராசிரியர். தாஜுத்தீன், தமிழர் சமூக நீதி பேரவை தமிழ் நாடான் அவர்களும் உரையாற்றினார்கள். TMCA செயலாளர், சகோ.அப்துல் அலீம் அவர்கள் பேசுகையில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று கூறினார். குவைத் தட்ப வெட்ப நிலை தீடிரென கடுமையாக மாறிய போதும் மக்கள் திரளாக வந்திருந்தது இது ஒரு புதிய சமூக எழுச்சி சுனாமியோ என்று குவைத் தமிழ் மக்கள் வியந்தனர். தலைவர் லால்குடி இக்பால் அனைவருக்கும் நன்றி கூறினார். மாலை 5.30க்கு தொடங்கி, 9.30க்கு நிகழ்ச்சி இனிதே முடிந்தது. நிகழ்ச்சிக்கு பேரதரவு அளித்த TVS நிறுவனங்களின் MD, சகோ.ஹைதர் அலி, TVS நிறுவனத்தின் மேனேஜர்.சகோ.அலாவுத்தீன், புரவலர் லக்கி பிரஸ். சுலைமான், அல்-ஷாஃபி ரெஸ்டாரன்ட் உரிமையாளர். டெல்லி பாஷா, TMCA தலைவர். அல்மாஸ் முஸ்தஃபா, சாதியா - அல்-யஸ்ரா ஃபுட்ஸ் மற்றும் அனைத்து தமிழ் நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது


கருத்துகள் இல்லை: