மேலப்பாளையத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் லட்சிய திருமணவிழா த.மு.மு.க. ஏற்பாட்டில் நேற்று காலை நடைபெற்றது.
திருமணத்தில் வரதட்சணை வழங்குவதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் மணமகன், மணமகளுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் விழா நேற்று மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மேலப்பாளையம் செய்குல் அக்பர் தெருவில் நேற்று காலை 11 மணிக்கு நடந்த விழாவுக்கு த.மு.மு.க. மாநில பொருளாளர் ரகுமத்துல்லா தலைமை தாங்கினார்.
விழாவில் மணப்பெண் எஸ்.ஏ.முகர்ரமாவுக்கு, மணமகன் எஸ்.முகமது அபுபக்கர் சித்திக் வரதட்சணை வழங்கினார். பின்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனின் தந்தை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தண்டன் சேக்மன்சூர்,
தாய் சிமிட்டி சுலைகா, மணமகளின் தந்தை சுல்தான் அப்துல்ஹமீது, தாய் மும்தாஜ் மற்றும் நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் பாருக்,செயலாளர் உஸ்மான்கான்,துணை செயலாளர் ரசூல்மைதீன்,நகர செயலாளர் காசிம் பிர்தௌசி,பொருளாளர் காஜா மைதீன்,மாநகராட்சி சுகாதார உணவு ஆய்வாளர்கள் சங்கரலிங்கம்,காளிமுத்து உள்பட த.மு.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வளைகுடா த.மு.மு.க. முன்னாள் அமைப்பாளர் முகமது பஸ்லுல் இலாஹி செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக